அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

10:07 PM (IST) Nov 28
குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
09:46 PM (IST) Nov 28
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளனர்.
09:45 PM (IST) Nov 28
அஞ்சல் அலுவலக திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ. 3,083 பெறலாம். இத்தகைய போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
07:19 PM (IST) Nov 28
இப்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை 24 மணிநேரத்திற்கு முன்பே மாற்றலாம். ரயில்வே டிக்கெட் பரிமாற்ற விதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
06:06 PM (IST) Nov 28
உத்தரகாசி சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? 17 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது, நிகழ்வுகளின் முழுமையான வரிசையை அறிந்து கொள்ளுங்கள்.
04:52 PM (IST) Nov 28
உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
04:51 PM (IST) Nov 28
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்
04:11 PM (IST) Nov 28
மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 5 மணிநேர இலவச இணையத்தைப் பயன்படுத்துங்கள்.
03:53 PM (IST) Nov 28
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது
03:42 PM (IST) Nov 28
பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எது சிறந்தது? வாங்குவதற்கு முன் இந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.
03:24 PM (IST) Nov 28
சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மனுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
02:40 PM (IST) Nov 28
Uttarakhand Tunnel Rescue : சுமார் 17 நாட்களாக நடந்து வந்த மீட்பு பணியில் மாபெரும் முன்னேற்றமாக, உள்ளே சிக்கி உள்ள பணியாளர்களை வெளியே கொண்டு வர பைப் அமைப்பு போடும் பணி தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.
02:00 PM (IST) Nov 28
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02:00 PM (IST) Nov 28
கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
01:33 PM (IST) Nov 28
முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
01:16 PM (IST) Nov 28
அசோக் செல்வனின் சபா நாயகன் படமும் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இருவருக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் உருவாகி இருக்கிறது.
12:57 PM (IST) Nov 28
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது
12:25 PM (IST) Nov 28
Uttarakhand Tunnel : உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 பணியாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
12:23 PM (IST) Nov 28
உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது
11:34 AM (IST) Nov 28
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.
11:30 AM (IST) Nov 28
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
11:17 AM (IST) Nov 28
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
11:13 AM (IST) Nov 28
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
11:11 AM (IST) Nov 28
மாமன்னன் திரைப்படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து என்பவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
10:32 AM (IST) Nov 28
இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்து, முஸ்லிம் பண்டிகைகளுக்கான விடுமுறையை அதிகரிப்பதாக பீகார் அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது
10:07 AM (IST) Nov 28
அன்னபூரணி, பார்க்கிங், சூரகன், தூதா, அனிமல், நாடு ஆகிய படங்கள் டிசம்பர் 1-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.
09:26 AM (IST) Nov 28
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
09:13 AM (IST) Nov 28
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பூர்ணிமா, சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் இணைந்து நடித்துள்ளார்.
08:55 AM (IST) Nov 28
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
08:53 AM (IST) Nov 28
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் ஐய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
08:01 AM (IST) Nov 28
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:14 AM (IST) Nov 28
தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:14 AM (IST) Nov 28
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி அதிமுக நோக்கி வருவார்கள் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.