உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக நேற்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்த நிலையில் உத்தரகாசி (உத்தரகாண்ட்) சுரங்கப்பாதை மீட்பு குறித்து NDMA உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அடா ஹஸ்னைன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "நாங்கள் ஒரு திருப்புமுனையை நெருங்கிவிட்டோம். ஆனால் இன்னும் அங்கு வரவில்லை. பணிகள் நடைபெற்று, 58 மீட்டரை எட்டியுள்ளோம்.

குப்பைகள் வெட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு முழுவதும், எங்கள் சுரங்கத் தொழிலாளர்கள், நிபுணர்கள் மற்றும் இராணுவப் பொறியாளர்கள் அதை 58 மீட்டருக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. மேலும் குழாய் இயந்திரத்தின் உதவியுடன் தள்ளப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
ரூ.490 கோடி சொத்து மதிப்பு.. இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?
