உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.
சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பணி முடிந்தது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதினேழு நாட்களாக போராடி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். உடனே தொழிலாளர்களின் உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரையும் மாலை அணிவித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் நண்பர்களுக்கு உங்கள் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் காட்டும் பொறுமையும் தைரியமும் போதுமான அளவு பாராட்ட முடியாது.
இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களின் ஆவியையும் நான் வணங்குகிறேன். அவரது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர் என்று பிரதமர் மோடி பதிவினை வெளியிட்டுள்ளார்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..
