Uttarakhand Tunnel : உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 பணியாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தற்போது சிக்கியுள்ள பணியாளர்களுக்கு சுமார் 5 மீட்டர் தொலைவரை சென்றுள்ள மீட்பு குழுவினர் கைகளால் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். RAT HOLE MINING என்ற தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி அவர்களை மீட்கும் பணி நடந்து வருகின்றது.

Scroll to load tweet…

ஆகவே எந்த நேரம் வேண்டுமானாலும் சிக்கியுள்ள பணியாளர்கள் மீட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…

வெளியே வந்தவுடன் பணியாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் அம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளது.