Asianet News TamilAsianet News Tamil

மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் பலி... மூச்சுத்திணறலால் 30 வயதில் உயிரிழந்த பரிதாபம்

,மாமன்னன் திரைப்படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து என்பவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Maamannan Director Mari selvaraj AD marimuthu died at the age of 30 gan
Author
First Published Nov 28, 2023, 11:08 AM IST | Last Updated Nov 28, 2023, 11:08 AM IST

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என வரிசையாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருப்பவர் மாரி செல்வராஜ். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் மாரி முத்து. 30 வயதாகும் மாரிமுத்து கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்த நிலையில், மாரிமுத்து மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி என்கிற கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்துள்ளார். இவர் தனியாக படம் இயக்க கதையும் தயார் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Maamannan Director Mari selvaraj AD marimuthu died at the age of 30 gan

மறைந்த மாரிமுத்துவுக்கு ஷீபா என்கிற பெண்ணுடன் திருமணமாகி இவர்களுக்கு 5 வயதில் சாமுவேல் என்கிற மகனும் இருக்கிறார். மாரிமுத்துக்கு அதிகளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ந்துள்ளார்.

மாரிமுத்துவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது மரணத்துக்கு வேறேதும் காரணம் இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாமன்னன் படத்தின் வெற்றிவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கையால் மாரிமுத்து பரிசு வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அன்னபூரணி முதல் பார்க்கிங் வரை... டிசம்பர் 1-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios