Asianet News TamilAsianet News Tamil

நான் தமிழச்சி.. அங்க வெறும் 20 பேர் தான்.. காங்கிரஸ் கட்சியை பங்கமாக கலாய்த்த நடிகை குஷ்பு..!

குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் குறித்து நடிகை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

Actress Khushbu criticized the Tamil nadu Congress party-rag
Author
First Published Nov 28, 2023, 10:04 PM IST | Last Updated Nov 28, 2023, 10:06 PM IST

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை சார்பில் இன்று குஷ்பு இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குஷ்பு உருவப்படதிற்கு சாணம் அடித்து காங்கிரஸ் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு? இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றம் நடைபெறுகிறது.

நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நவம்பர் மாதம் வரை தலித் மக்களுக்கு எதிராக 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

450 வழக்குகளில் ஒரு வழக்கிற்காக கூட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை.  குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று எண்ணி காங்கிரஸ் கட்சியினர் போராடி உள்ளார்கள். 1986 முதல் தமிழகத்தில் வசித்து வருகிறேன். தமிழச்சியாக இங்கு வசித்து வருகிறேன் இது என் சொந்த ஊர். நான் இதுவரை யாரிடமும் ஏற்றத்தாழ்வு பார்த்து பழகவில்லை” என்று கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் பதிவிட்ட சேரி என்ற வார்த்தையில் இருந்து பின்வாங்குவீர்களா என்ற கேள்விக்கு..? நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை, நான் அதில் தெளிவாக இருக்கிறேன். தவறு செய்திருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருப்பேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.

காங்கிரஸ் கட்சியினர் ஒரு வாரமாக போராட வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு வெறும் 20 பேருடன் வந்து போராடி உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மொத்தத்தில் 20 பேர் தான் உள்ளனர். பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று பேசியவர்கள், இன்று ஒரு பெண்ணிற்கு எதிராக எப்படி போராடி உள்ளார்கள் என்பதையும் அனைவரும் பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios