Published : Nov 24, 2023, 07:20 AM ISTUpdated : Nov 25, 2023, 12:02 AM IST

Tamil News Live Updates: அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்

சுருக்கம்

4 மாதங்கள் கழித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியுள்ளது. 

Tamil News Live Updates: அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்

12:02 AM (IST) Nov 25

ரூ.5 இருந்தா மட்டும் போதும்.. ஒட்டுமொத்த சென்னையை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம் - மெட்ரோ அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.5 என்ற பயணக் கட்டண சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

11:22 PM (IST) Nov 24

டெலிவரி பாய்ஸ்.. காலேஜ் பெண்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 100 கி.மீ மைலேஜ் தரும்.. விலை தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:03 PM (IST) Nov 24

புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்தும் எல்ஐசி.. எப்போது தொடங்குகிறது.? முழு விவரம் இதோ..

எல்ஐசி பல புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்துகிறது. வருவாய் (தனிநபர்) பிரிவில் எல்ஐசியின் புதிய பாலிசி பிரீமியம் நடப்பு 2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் 2.65 சதவீதம் அதிகரித்து ரூ.25,184 கோடியாக உயர்ந்துள்ளது.

09:32 PM (IST) Nov 24

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகளும் விடுதலை..!

13 இஸ்ரேலிய, 12 தாய்லாந்து பிணைக்கைதிகள் காசாவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கத்துடன் விடுவிக்கப்பட்டனர். பிணைக்கைதிகள் ஆம்புலன்ஸ்களில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸிலிருந்து எகிப்து எல்லையில் உள்ள ரஃபா கிராசிங் வரை பயணிக்கின்றனர்.

08:57 PM (IST) Nov 24

சீனாவில் அதிகரிக்கும் H9N2 சுவாச நோய் தொற்று.. இந்தியாவிற்கு பாதிப்பா? மத்திய அரசு கொடுத்த வார்னிங்.!!

மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை, வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளில் H9N2 வழக்குகள் மற்றும் சுவாச நோய்களை கண்காணித்து வருவதாகக் கூறியது.

08:30 PM (IST) Nov 24

ராஷ்மிகா மந்தனா கிடையாது.. பூஜா ஹெக்டே கிடையாது.. ரூ.165 கோடிக்கு அதிபதி இந்த தென்னிந்திய நடிகைதான்..

பிரபல நடிகைகளான அனுஷ்கா ஷெட்டி, சமந்தா, தமன்னா, ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே இவர்களில் யாரும் பெருமளவு சொத்துக்களை வைத்திருக்கவில்லை. தென்னிந்தியாவின் பணக்கார நடிகை யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.

07:47 PM (IST) Nov 24

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

07:21 PM (IST) Nov 24

ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன்: மதுரை மாவட்டம் சாதனை - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

06:58 PM (IST) Nov 24

விறுவிறுவென தயாராகும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன

06:45 PM (IST) Nov 24

உங்க அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லைனாலும்.. பேங்க் உங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கும்? எப்படி.?

வங்கி கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும் வங்கி 10 ஆயிரம் கொடுக்கும். எப்படி என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

06:45 PM (IST) Nov 24

உங்க அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லைனாலும்.. பேங்க் உங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கும்? எப்படி.?

வங்கி கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும் வங்கி 10 ஆயிரம் கொடுக்கும். எப்படி என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

06:44 PM (IST) Nov 24

SSC GD Constable: 75 ஆயிரம் காலியிடங்கள்.. 10வது படித்திருந்தால் போதும்.. காத்திருக்கும் அரசு வேலை!

எஸ்எஸ்சி ஜிடி (SSC GD) கான்ஸ்டபிள் 2023 காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 75000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

06:25 PM (IST) Nov 24

சம்பளத்தை கேட்டவருக்கு பெல்ட் அடி: பெண் தொழிலதிபர் செய்த கொடூரம்!

சம்பளத்தை கேட்டவரை பெல்ட்டால் அடிக்க வைத்த பெண் தொழிலதிபர், தனது காலணியை பாதிக்கப்பட்டவரது நாக்கால் தடவ விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

05:48 PM (IST) Nov 24

வெறும் 17 ஆயிரத்தில் விற்பனையாகும் ஆப்பிள் ஐபோன் 13.. எப்படி வாங்குவது தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 13 2021 இல் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது ஆப்பிள் ஸ்டோரில் ரூ.59,900 குறைந்த விலையில் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் ஆப்பிள் ஐபோன் 13 ஐ 17,999 குறைந்த விலையில் வாங்கலாம்.

05:31 PM (IST) Nov 24

தாறுமாறு Black Friday sale.. சர்வதேச வலைத்தளங்கள் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும்.. எந்தெந்த Websites தெரியுமா?

பிளாக் ப்ரைடே சேல் நவம்பர் 24 அன்று அமெரிக்காவில் தொடங்குகிறது. மேலும் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

05:16 PM (IST) Nov 24

ஆண்டுக்கு ரூ.8.20 லட்சம் கோடி வருவாய்: அதிரவைக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்னணி!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு ரூ.8.20 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

 

03:52 PM (IST) Nov 24

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

03:32 PM (IST) Nov 24

கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரனமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 

03:22 PM (IST) Nov 24

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்... பிக்பாஸ் வீட்டில் இருந்து அவுட் ஆகப்போகும் 2 விக்கெட் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க உள்ளதாகவும், அதில் யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

03:22 PM (IST) Nov 24

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்... பிக்பாஸ் வீட்டில் இருந்து அவுட் ஆகப்போகும் 2 விக்கெட் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க உள்ளதாகவும், அதில் யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

03:14 PM (IST) Nov 24

மாணவர்களுக்கு தனித் தனியாக தமிழில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி; என்னவாக இருக்கும்?!!

கரூர் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக தமிழில் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்

 

02:47 PM (IST) Nov 24

டீப் ஃபேக்: சமூக ஊடகங்களுக்கு 7 நாள் கெடு; நடவடிக்கை எடுக்க அதிகாரி - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

 

02:15 PM (IST) Nov 24

மன்னிப்பு கேட்ட மன்சூர்; மாட்டிக்கொண்ட சீனு ராமசாமி! தர்மதுரை இயக்குனர் மீது தாறுமாறாக குவியும் பாலியல் புகார்

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதால் மன்சூர் அலிகான் பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

02:04 PM (IST) Nov 24

ஆளுநர் குறித்து விரிவாக பேசப் போகும் முதல்வர் ஸ்டாலின்!

ஆளுநர் மற்றும் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அடுத்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசவுள்ளார்

 

02:01 PM (IST) Nov 24

டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ வழக்கை வாபஸ் பெற கர்நாடக அரசு ஒப்புதல்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ வழக்கை வாபஸ் பெற அம்மாநில காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது

01:39 PM (IST) Nov 24

80ஸ் பில்டப் படத்தின் விமர்சனம்

கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 80ஸ் பில்டப் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

11:59 AM (IST) Nov 24

திமுக முக்கிய பிரமுகர்களை சுத்து போடும் அமலாக்கத்துறை... கதிர் ஆனந்தை தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் சம்மன்.!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பி நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

11:30 AM (IST) Nov 24

கோவையில் இலவச இணையதள வசதியுடன் நூலகம் திறந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்... குவியும் பாராட்டு

கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவச இணையதள வசதியுடன் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நான்காயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் நூலகம் திறந்துள்ளனர்.

10:52 AM (IST) Nov 24

முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதி மகன்... அனல்பறக்க ஆரம்பமான ஷூட்டிங் - இயக்குனர் இவரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.

10:39 AM (IST) Nov 24

"எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு".. பகிரங்கமாக சொன்ன மன்சூர் அலிகான் - வெளியான அறிக்கை!

Mansoor Apology to Trisha : கடந்த ஒருவார காலமாக திரும்பும் பக்கமெல்லாம் ஒலித்த ஒரே பிரச்னை திரிஷா மற்றும் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சனை தான். தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார் மன்சூர் அலி கான்

10:25 AM (IST) Nov 24

Today Gold Rate in Chennai : அப்பாடா.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்தது.. இதுதான் வாங்க சரியான நேரம்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:04 AM (IST) Nov 24

உத்தமன் போல் விளக்கம் கொடுத்த சீனு ராமசாமி... அவர் செய்த சில்மிஷ வேலைகளை சொல்லி டார் டாராக கிழித்த மனிஷா யாதவ்

இயக்குனர் சீனு ராமசாமி தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், நடிகை மனிஷா யாதவ் அவரை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

09:56 AM (IST) Nov 24

அமமுக பிரமுகர்களை கோடிகளை கொடுத்து விலைக்கு வாங்கும் இபிஎஸ்! துரோகமும் ஏமாற்று வேலையும் இவருக்கு பொழப்பு! TTV

எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை. துரோகமும் ஏமாற்று வேலையும் தான் அவரது அரசியல் நடைமுறை என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

09:02 AM (IST) Nov 24

ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், முன்னணி தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

08:07 AM (IST) Nov 24

Power Shutdown in Chennai: சென்னை மக்களே.. இன்று எந்ததெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:56 AM (IST) Nov 24

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

07:43 AM (IST) Nov 24

கனமழை.. குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

07:25 AM (IST) Nov 24

Coimbatore Heavy Rain: தீவிரமாகும் வடகிழக்கு பருவ மழை.. கோவை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

07:24 AM (IST) Nov 24

திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து! திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்! இபிஎஸ் விளாசல்

திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 


More Trending News