கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரனமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது வலுப்பெற்று 29ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தனித் தனியாக தமிழில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி; என்னவாக இருக்கும்?!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.