முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதி மகன்... அனல்பறக்க ஆரம்பமான ஷூட்டிங் - இயக்குனர் இவரா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
vijay sethupathi son surya
சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி கணேசனின் மகன் பிரபு, அவருடைய மகன் விக்ரம் பிரபு, சரத்குமார் மகள் வரலட்சுமி, விஜய் மகன் சஞ்சய், ஷங்கர் மகள் அதிதி, பாக்கியராஜ் மகன் சாந்தனு, ராதா மகள் கார்த்திகா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா, கமல் மகள்கள் அக்ஷரா மற்றும் ஸ்ருதி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
surya sethupathi
இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் தான் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், தற்போது தன் தந்தையை போல் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். லயோலா கல்லூரியில் படித்து பட்டம்பெற்றுள்ள சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்குகிறார். அவரும் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
phoenix movie poster
சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்துக்கு பீனிக்ஸ் (வீழான்) என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் ஜவான் பட ஷாருக்கான் போல் முகத்தில் சாக்கை கட்டி மறைத்தபடி மாஸ் ஹீரோ லுக்கில் இருக்கும் புகைப்படமும் அந்த போஸ்டரில் இடம் பெற்று உள்ளது.
surya sethupathi, anal arasu
இதன்மூலம் முதல் படத்திலேயே சூர்யா சேதுபதி மாஸ் ஹீரோவாக அறிமுகமாவது உறுதியாக உள்ளது. பீனிக்ஸ் படத்திற்கு சாம் சி.எஸ். தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜ் மேற்கொள்ள உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பதை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. பீனிக்ஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள சூர்யா சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?