Coimbatore Heavy Rain: தீவிரமாகும் வடகிழக்கு பருவ மழை.. கோவை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள். மண்சுவர் வீடுகள். சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள். மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுவும் அறிவுறுத்தப்படுகிறது. 

Coimbatore District Collector warning for public tvk

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, குமரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்,  பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ. செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- Coimbatore Noyyal River: கனமழை எதிரொலி; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

Coimbatore District Collector warning for public tvk

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள். மண்சுவர் வீடுகள். சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள். மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுவும் அறிவுறுத்தப்படுகிறது. 

Coimbatore District Collector warning for public tvk

இதையும் படிங்க;-  லெக்கின்ஸ் அணிய தடை? அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு? மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ. செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios