Asianet News TamilAsianet News Tamil

Coimbatore Noyyal River: கனமழை எதிரொலி; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினை எம்.எல்.ஏ. எஸ்பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

overflow of water mla sp velumani inspect noyyal river at coimbatore vel
Author
First Published Nov 23, 2023, 1:19 PM IST

கோவை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு 9 மணி அளவில் கோவை நகரின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது. பீளமேடு, ஹோப்ஸ், மசக்காளிபாளையம், புலியகுளம், ஓண்டிபுதூர், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, போத்தனூர்  சுந்தராபுரம், இராமநாதபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. 

கனமழை காரணமாக சாலையின் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள குளங்கள் ஒவ்வொன்றும் தொடர் நீர் வழிப்பாதைகளைக் கொண்டது. கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, ஆகிய குளங்கள் 100% நிரம்பி உள்ள நிலையில், செல்வ சிந்தாமணி குளத்தின் நீர் கொள்ளளவை குறைத்து மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி உத்தரவிட்டார். 

கணவருடன் மாலை மாற்றி திருக்கடையூரில் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு; அண்ணாமலை பெயரில் சிறப்பு அர்ச்சனை

இதனால் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், செல்வபுரம் பகுதியில் தண்ணீர் தேங்காமல், செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து தண்ணீர் கால்வாய் வழியாக உக்கடம் பெரிய குளத்திற்கு சென்றது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவு தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே நொய்யல் ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வேலுமணி நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios