MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விறுவிறுவென தயாராகும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்!

விறுவிறுவென தயாராகும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன

2 Min read
Author : Manikanda Prabu
Published : Nov 24 2023, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக் கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

36

அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

46

இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை ஆகியவையும் அமையவிருக்கிறது.

56

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அண்மையில், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்டார். அப்போது, அடுத்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்திடும்பொருட்டு பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

66

அதன்படி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான கட்டுமானத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக தயாராகும் மைதானத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார். இத்திடலில் அடுத்தாண்டு பொங்கலுக்கு போட்டிகளை நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

About the Author

MP
Manikanda Prabu
ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay to Meet PM Modi: டெல்லி பறக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியிடம் பேசப்போவது என்ன?
Recommended image2
Now Playing
பரபரக்கும் அதிமுக அலுவலகம்..! இபிஎஸ் தலைமையில் காரசாரமாக நடைபெறும் மா.செ. கூட்டம்
Recommended image3
Now Playing
ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்த தளபதி! முதல்வர் விஜய் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved