மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார். சென்னை மழை வெள்ள பாதிப்பை ராஜ்சிங் பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

10:50 PM (IST) Dec 24
நாட்டில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் சொத்து ஆவணங்களை ஆதாருடன் இணைப்பது விரைவில் அவசியமாகலாம். இதுகுறித்த முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.
08:01 PM (IST) Dec 24
நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
08:01 PM (IST) Dec 24
நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
06:41 PM (IST) Dec 24
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
05:38 PM (IST) Dec 24
1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
04:59 PM (IST) Dec 24
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்து விவாதிக்கவும், ஆய்வு செய்யவும் பிரதமர் அலுவலக உயர்நிலைக் கூட்டம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
04:02 PM (IST) Dec 24
ஆளுநர் வருகையின்போது உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு செய்த உத்தரப்பிரதேச மாநில கிளர்க் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
03:13 PM (IST) Dec 24
கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்
02:30 PM (IST) Dec 24
பாஜகவை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
02:17 PM (IST) Dec 24
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த அன்னபூரணி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
01:41 PM (IST) Dec 24
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் தி பாய்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
01:35 PM (IST) Dec 24
உதயநிதி வாய்க்கொழுப்புற்று பேசுகிறார். விரைவில் அவருடைய பேச்சு தக்க பாடம் கற்பிக்கும் என என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாடியுள்ளார்
01:10 PM (IST) Dec 24
இந்த பத்தாண்டுக்குள் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்
01:04 PM (IST) Dec 24
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாலேயே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய தூத்துக்குடி செல்கிறார் என வைகோ கூறியுள்ளார்.
01:04 PM (IST) Dec 24
அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
01:00 PM (IST) Dec 24
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரம்பா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது பற்றி பேசி இருக்கிறார்.
11:35 AM (IST) Dec 24
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைத் தானே டைட்டில் வின்னர் என புகழ்ந்து கொண்டிருந்த சரவண விக்ரமின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:06 AM (IST) Dec 24
நாவலூர் அருகே ஐடி பெண் ஊழியர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
11:03 AM (IST) Dec 24
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
11:02 AM (IST) Dec 24
டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது
11:00 AM (IST) Dec 24
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:27 AM (IST) Dec 24
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:25 AM (IST) Dec 24
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
09:24 AM (IST) Dec 24
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள சலார் திரைப்படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
08:47 AM (IST) Dec 24
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார். சென்னை மழை வெள்ள பாதிப்பை ராஜ்சிங் பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
08:35 AM (IST) Dec 24
நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன்னுடைய ஒரிஜினல் பெயரான கேத்தீஸ்வரன் என்கிற பெயரை மாற்றியதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
08:27 AM (IST) Dec 24
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
08:27 AM (IST) Dec 24
நீண்ட காலமாகவே தமிழ்நாட்டு மக்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதைத் தான் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
07:02 AM (IST) Dec 24
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும். நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:02 AM (IST) Dec 24
சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, நேற்று இரவு தனது வீட்டில் மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
07:01 AM (IST) Dec 24
தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை தாருங்கள் என்று தான் கேட்கிறோம். இதைக்கேட்டால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோபம் வருகிறது. தர முடியாது என்கிறார். பேரிடரே இல்லை என்கிறார். போதாதற்கு எனக்கு மரியாதை பற்றியும் – பாஷை பற்றியும் பாடம் எடுக்கிறார் என உதயநிதி விமர்சித்தார்.