- Home
- Gallery
- பிறந்த நாளில் ஐடி பெண் ஊழியர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை.. முன்னாள் காதலன் பகீர் தகவல்.!
பிறந்த நாளில் ஐடி பெண் ஊழியர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை.. முன்னாள் காதலன் பகீர் தகவல்.!
நாவலூர் அருகே ஐடி பெண் ஊழியர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chengalpattu Crime News
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை அடுத்துள்ள பொன்மார் வேதகிரி நகரில் உள்ள சாலையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது இளம்பெண் ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
IT Woman Employee
இதுதொடர்பாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Youth Arrest
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த பெண் பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மதுரையைச் சேர்ந்த நந்தினி (25) என்பது தெரிய வந்தது. நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றுவிட்டு பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்று கொடூரமாக எரித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
Chengalpattu Police
இந்த சம்பவம் தொடர்பாக வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நந்தினியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர் வேறொரு நபருடன் பழகியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.