1 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..
1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Budget Electric Scooters
ஓலா நிறுவனம், தங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் S1X 3 kW பேட்டரியை 0% முதல் 100% வரை 7.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்கிறது. ஓலா ஹைப்பர் சார்ஜரில் இருந்து இந்த மின்சார ஸ்கூட்டரை 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால், சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை எளிதில் தொடலாம். Ola S1X இன் வரம்பு, அதாவது லிமிட் சுமார் 151 கிலோமீட்டர்கள். இதன் விலை 1 லட்சத்திற்கும் குறைவு ஆகும்.
Greta Electric Glide
கிரேட்டா எலக்ட்ரிக் க்ளைடு ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி இருக்கும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை ஓட்டும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 2.5 மணிநேரம் ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது. இது திருட்டு எதிர்ப்பு அலாரம், முன் கையுறை பெட்டி, லைட் டிசைனர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,000.
AMO Electric Jaunty
AMO எலக்ட்ரிக் ஜான்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.59,966 - 90,064 வரை இருக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 90 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Joy E Bike Wolf
ஜாய் இ பைக்கின் வுல்ஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்திலிருந்து 100% வரை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 மணிநேரம் ஆகும். ஆனால் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் சுமார் 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வரம்பு 90 கிலோமீட்டர். விலையைப் பற்றி பேசினால், 83,662 - 95,298 ரூபாய்க்கு கிடைக்கும்.
Ampere Zeal EX
ஆம்பியர் ஜீல் EX சுமார் ரூ.96,690 விலையில், இந்த மின்சார ஸ்கூட்டர் 60v, 2.3 kWh மேம்பட்ட லித்தியம் பேட்டரியுடன் வருகிறது, இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட 5 மணிநேரம் ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 50-55 கி.மீ. ஒரு மணி நேரத்திற்கு இருக்கலாம்.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..