- Home
- Gallery
- மிக்ஜாம் புயலால் வாஷ் அவுட் ஆன அன்னபூரணி படத்தை ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பிய படக்குழு - எப்போ ரிலீஸ்?
மிக்ஜாம் புயலால் வாஷ் அவுட் ஆன அன்னபூரணி படத்தை ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பிய படக்குழு - எப்போ ரிலீஸ்?
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த அன்னபூரணி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

annapoorani
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்து கடந்த டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார். இது நயன்தாராவின் 75-வது படமாகும்.
Annapoorani Movie
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிக்பாஸ் பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது தன்னுடைய 75-வது படம் என்பதால் இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார் நயன்தாரா. ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தியில் ஹீரோயினாக அறிமுகமான ஜவான் படத்துக்கே புரமோஷன் எதுவும் செய்யாமல் இருந்த நயன்தாரா, அன்னபூரணி படத்துக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்ததோடு சமூக வலைதளங்களிலும் புரமோஷன் செய்தார்.
Nayanthara Annapoorani movie
இப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்த போதிலும், இப்படம் ரிலீசான சமயத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் தியேட்டர்களும் மூடப்பட்டத்தால் அன்னபூரணி படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு, தியேட்டர்கள் மறுபடியும் திறக்கப்பட்டபோது புதுப்படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆனதால் அன்னபூரணி அப்படியே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. இதன்காரணமாக இப்படத்துக்கு தமிழ்நாட்டில் வெறும் 85 லட்சம் மட்டுமே ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Annapoorani movie OTT release
மிக்ஜாம் புயலால் தியேட்டரில் வாஷ் அவுட் ஆன அன்னபூரணி படத்தை தற்போது வேறுவழியின்றி ஓடிடிக்கு அனுப்பி உள்ளது படக்குழு. அதன்படி அப்படம் வருகிற டிசம்பர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அன்றைய தினம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓடிடி ரிலீசுக்கு பின் இப்படத்திற்கு எந்த அளவு மவுசு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மறுபடியும் அடல்ட் படமா? இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த பட டீசர் இதோ