சூப்பர்ஸ்டாரையும் விட்டுவைக்காத தோல்விகள்... ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன திரைப்படங்கள் லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Rajinikanth flop movies
ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவரின் தொடர் வெற்றிப்படங்கள் தான். 1990-களுக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. சில படங்கள் சுமாராக இருந்தாலும் அவற்றுக்கும் பிரம்மாண்ட வசூல் கிடைக்கும் அந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாருக்கு மவுசு இருந்து வருகிறது. 1990க்கு பின் இவர் நடித்து பிளாப் ஆன படங்கள் மிகவும் கம்மி தான். ஆனால் அதற்கு முன்னர் எக்கச்சக்கமான பிளாப் படங்கள் உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.
70களில்..
ரஜினிகாந்த் நடிப்பில் 1977-ல் வெளிவந்த ரகுபதி ராகவ ராஜாராம், ஆறு புஷ்பங்கள், ஆடுபுலி ஆட்டம் ஆகிய படங்கள் பிளாப் ஆகின. அதேபோல் 1978-ல் வணக்கத்துக்குறிய காதலியே, மாங்குடி மைனர், சதுரங்கம், இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில் போன்ற திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன.
80களில்...
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து 1980-ம் ஆண்டு வெளிவந்த நான் போட்ட சவால், எல்லாம் உன் கை ராசி போன்ற திரைப்படங்கள் பிளாப் ஆகின. இதையடுத்து 1981-ல் கர்ஜனை, 1985-ல் உன் கண்ணில் நீர் வழிந்தால், 1986-ல் மாவீரன், நான் அடிமை இல்லை, 7988-ல் கொடி பறக்குது ஆகிய திரைப்படங்கள் தோல்வி அடைந்தன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
90களில்...
1990-களில் ரஜினிகாந்த்தின் கெரியர் உச்சத்தை தொட்ட சமயம் என்பதால் இந்த காலகட்டத்தில் தோல்வி படங்கள் மிகவும் கம்மியாகவே இருந்தன. 1990-ல் வெளியான அதிசயபிறவி, 1991-ல் ரிலீஸ் ஆன நாட்டுக்கு ஒரு நல்லவன், 1992-ல் ரிலீஸ் ஆன பாண்டியன், 1993-ல் ரஜினி தயாரிப்பில் வெளியான வள்ளி ஆகிய படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தன.
2000 முதல் 2023 வரை
2000 முதல் 2010-வரை ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி, சிவாஜி தி பாஸ், எந்திரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த காலட்டத்தில் அவர் நடித்து தோல்வி அடைந்த படங்கள் இரண்டு தான். அவை 2002-ல் ரிலீஸ் ஆன பாபா மற்றொன்று 2008-ல் வெளிவந்த குசேலன், இப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருந்தார்.
இதையடுத்து 2010 முதல் 2020 வரை அவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இதன்பின்னர் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடையும் அளவுக்கு தோல்வி படங்களை ரஜினி கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்த படங்களாக அமைந்தன.
இதையும் படியுங்கள்... கோடிகளில் புரளும் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கிறதா?