கேரள அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா!
கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்
கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார். அவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் அண்மைக்காலமாக வெளியாகிய வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவரும் முதல்வர் பினராயி விஜயனிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வருகிற 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெறவுள்ள இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் இந்த நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
ஊழல் பற்றி பேச பாஜகவினருக்கு அருகதை இல்லை: திருமாவளவன் காட்டம்!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் அங்கம் வகித்த இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் வகிக்கும் அமைச்சரவை மற்ற கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தந்தின்படி, ஜனாதிபதிய கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்தோணி ராஜு, தனது பதவி மற்றும் போக்குவரத்துத் துறையை கேரள காங்கிரஸ் (பி) கட்சியை சேர்ந்த கணேஷ் குமாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல், ஐஎன்எல் அமைச்சர் அகமது தேவர்கோவில் தனது துறைமுகம், தொல்லியல் மற்றும் அருங்காட்சியக அமைச்சகத்தை காங்கிரஸ் (எஸ்) கட்சியின் கடன்னப்பள்ளியிடம் ஒப்படைப்பார் என தெரிகிறது.