இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

05:28 PM (IST) Sep 18
ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
04:34 PM (IST) Sep 18
சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வழங்க கோரி நூதன வேண்டுதலில் ஈடுபட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது
04:13 PM (IST) Sep 18
நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஆசிரமத்தில் யோகா டீச்சர் டிரெயினிங் முடித்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.
03:42 PM (IST) Sep 18
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
03:25 PM (IST) Sep 18
நடிகர் தனுஷ், தன்னுடைய உதவி இயக்குனர் ஆனந்தின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
02:54 PM (IST) Sep 18
உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ தெரிவித்துள்ளார்
02:53 PM (IST) Sep 18
ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஏன் கலந்து கொள்ளவில்லை என ஏசியாநெட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
01:55 PM (IST) Sep 18
நீச்சல் குளத்தில் தன் காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
12:52 PM (IST) Sep 18
ஜி20 தலைமையேற்று இந்தியா சாதித்தது என்ன என்பது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்
12:51 PM (IST) Sep 18
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
12:47 PM (IST) Sep 18
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்திற்கு மண்ணாங்கட்டி என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
11:11 AM (IST) Sep 18
எங்கு சென்றாலும் சர்ச்சையில் சிக்கும் பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் பற்றியும், அவரின் பைக் கலெக்ஷன் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
10:57 AM (IST) Sep 18
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
10:24 AM (IST) Sep 18
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மக்களவையில் 11 மணிக்கு சிறப்புரையாற்றுகிற
10:04 AM (IST) Sep 18
பொள்ளாச்சியில் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:43 AM (IST) Sep 18
பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
08:48 AM (IST) Sep 18
காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் ரிஷப்சன் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
08:13 AM (IST) Sep 18
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
08:12 AM (IST) Sep 18
காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக வாகன ஓட்டியது ஆகிய பிரிவுகளில் பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
08:09 AM (IST) Sep 18
காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாசன் தற்போது தனது நண்பர் அஜீஷ் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.