இனி ஆக்டர் மட்டுமில்ல... டீச்சரும் கூட! யோகா டீச்சர் ஆனார் ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது யோகா டீச்சராக மாறி இருக்கிறார்.
ramya pandian
தமிழில் டம்மி டப்பாசு, ஜோக்கர், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இதுதவிர குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தி இருந்தார் ரம்யா. தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ரம்யா பாண்டியன், சைடு கேப்பில் யோகா டீச்சராகவும் மாறி இருக்கிறார்.
ramya pandian certified yoga teacher
ரிஷிகேஷில் உள்ள சுமாரி ஸ்ரீ ஸ்ரீக்கு சொந்தமான ஆசிரமத்தில் 21 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பை முடித்து, யோகா டீச்சர் ஆகும் தகுதி உடையவர் என்கிற சான்றிதழையும் பெற்றுள்ளார் ரம்யா பாண்டியன். இதனால் இனி தான் ஆக்டர் மட்டுமில்லை யோகா டீச்சர் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்து உள்ளார் ரம்யா பாண்டியன்.
ramya pandian yoga training
இந்த 21 நாள் பயணம் குறித்து அவர் போட்டுள்ள பதிவில், தெய்வ பூமி என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ், 21 மறக்க முடியாத நாட்களை என் இதயத்தில் பதித்துள்ளது. கங்கையின் வழியே அமைதியான நடைப்பயணத்துடன் என் காலை பொழுது தொடங்கும். செல்லும் வழியில் கங்கையிடம் இதயப்பூர்வமான பிரார்த்தனைகளைச் செய்தபடியே ஆசிரமத்திற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வேன்.
இதையும் படியுங்கள்... உதவி இயக்குனரின் திருமணம்... ரீல் மகனோடு சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்
ramya pandian at rishikesh
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக்கொண்டேன். அதோடு, ஊட்டமளிக்கும் சாத்விக் உணவுகளையும், மயக்கும் கங்கா ஆரத்தி என இயற்கையுடன் அமைதியாக கடந்து சென்றது, மேலும் கங்கை நீரின் நிலையான ஒலி ஒரு தியான பின்னணியை வழங்கியது. ரிஷிகேஷ், என் இதயத்துக்கு நெருக்கமாகிவிட்டது. பாசிடிவிட்டி மற்றும் அமைதியை அதிகம் தரும் இந்த இடத்திற்கு விரைவில் திரும்ப வருவேன்” என பதிவிட்டுள்ளார்.
Actress ramya pandian
மற்றொரு பதிவில் இந்த யோகா பயிற்சி குறித்து ரம்யா பாண்டியன் குறிப்பிட்டுள்ளதாவது : “யோகா பல ஆண்டுகளாக எனது வாழ்க்கை முறையின் நேசத்துக்குரிய பகுதியாக இருந்து வருகிறது, ஆனால் எனது அறிவின் தாகம் என்னை ஆழமாக ஆராய வழிவகுத்தது. அதைக்கற்றுக்கொள்ள ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஆசிரமத்தை விட சிறந்த இடம் எது.
ramya pandian in ashnram
இந்த 200 மணிநேர பயிற்சி என்னை தியானம், பிராணாயாமம், ஆசனங்கள் மற்றும் ஆழ்ந்த யோக சூத்திரங்களில் மூழ்கடித்தது. யோகிகளின் பூமியான ரிஷிகேஷில் இதனை கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. இங்கு பயிற்சி செய்வதும் மட்டுமின்றி முடிவில்லாமல் கற்றுக்கொள்ளவும் முடிந்தது. சக யோகா ஆர்வலர்களுடன் இந்த பயணத்தை மேற்கொண்டதி சந்தோஷம்” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்போ யோகா கிளாஸ் ஸ்டார்ட் பண்ண போறீங்க என கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ