உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் பெஸ்ட்: அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ புகழாரம்!

உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ தெரிவித்துள்ளார்

India has the highest potential growth rate says American investor ray dalio smp

இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ, இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது என்றதுடன், பிரதமர் நரேந்திர மோடியை சீன தலைவர் டெங் ஜியோபிங்குடன் ஒப்பிட்டு பேசினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் UCLA வளாகத்தில் உள்ள ராய்ஸ் ஹாலில் ஆல்-இன் உச்சிமாநாடு 2023 நடைபெற்றது. அதில், அமெரிக்க முதலீட்டாளரும், பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனருமான ரே டாலியோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் உலகின் முதல் 20 நாடுகளுக்கான 10 ஆண்டு வளர்ச்சி விகித மதிப்பீடுகள் எங்களிடம் உள்ளன. அதில், இந்தியா மிக உயர்ந்த சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. நான் 1984ஆம் ஆண்டில் சீனா சென்றபோது, அந்நாடு இருந்த இடத்தில் தற்போது இந்தியா இருப்பதாக நினைக்கிறேன். தனிநபர் வருமானத்தைப் பார்த்தால் மோடி ஒரு டெங் ஜியோபிங் என்று நான் நினைக்கிறேன். வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் அனைத்தும் அங்கு உள்ளன.” என்றார்.

இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன: பிரதமர் மோடி பெருமிதம்!

‘இந்தியா மிகவும் முக்கியமானது. எந்தவொரு பிரச்சினையும் இந்தியாவைத் தடுத்து நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை’ என்றும் அவர் கூறினார்.

 

 

மேலும், “வரலாற்றில் நடுநிலை நாடுகளாக இருந்த நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், போர்களில் வெற்றி பெற்றவர்களை விட அந்த நாடுகள் சிறந்தவை. எனவே, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அதன் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் பலவற்றிற்கும் இடையே மோதல்கள் இருப்பதால், இந்தியா போன்ற நடுநிலை வகிக்கும் நாடுகள் பயனடைபவர்களாக இருக்கப் போகிறார்கள்.” என்றும் ரே டாலியோ தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios