SMS டைரக்டர்.. டாக்டர் ஹீரோயின்.. ஹாரிஸ் இசை! புது கூட்டணியில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் உடன் வெளிவந்த டைட்டில்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ஜெயம் ரவியின் 30-வது பட டைட்டிலை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று தான் எ.ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதுதவிர நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெயம் ரவியின் 30-வது படமான இது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒருபக்கம் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான இடம் மறுபக்கம் டிராபிக் நிறைந்த நகர வாழ்க்கை என இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Grand ஆக நடைபெற்ற அசோக் செல்வன் திருமண வரவேற்பு! சூர்யா முதல் ஆர்யா வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
இப்படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டு உள்ளதால், இப்படத்தில் அண்ணன், தங்கை பாசம் முக்கிய பங்காற்றும் என தெரிகிறது. ஏற்கனவே எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் சமீப காலமாக இயக்கிய படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. அந்த தோல்விகளில் இருந்து மீண்டும் இப்படம் மூலம் அவர் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?