பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டதாக தமிழக பாஜக அறிவித்த நிலையில், இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் கோவை மாவட்டம் அவிநாசியில் நடைபெறும் பாத யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்கிறார்

10:00 PM (IST) Oct 16
உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான ஸ்மார்ட் வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
09:32 PM (IST) Oct 16
ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக் ஆனது இரு சக்கர வாகனத்தைத் தேடுபவர்களுக்கு ஸ்டைலான, திறமையான, மலிவு விலையில் வருகிறது என்று கூறலாம்.
09:15 PM (IST) Oct 16
ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
07:51 PM (IST) Oct 16
பெங்களூருவில் இந்தியா முழுக்க உள்ள இளைஞர்களை குறிவைத்து ரூ.854 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
07:09 PM (IST) Oct 16
பிச்சைக்காரன் போல் காட்சியளிக்கும் ஜோத்பூர் நபர், ஐபோன் 15 ஐ வாங்குவதற்காக சாக்கு பையில் காசுகளுடன் சென்றார்.
06:42 PM (IST) Oct 16
அகவிலைப்படி உயர்வு, வரும் நாட்களில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படலாம். இந்த அறிவிப்பு வெளியானவுடன், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
06:06 PM (IST) Oct 16
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடக்கும் 'தலைவர் 170' படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
06:05 PM (IST) Oct 16
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது இப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
05:04 PM (IST) Oct 16
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
04:18 PM (IST) Oct 16
ஏசர் இந்தியாவில் முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
03:59 PM (IST) Oct 16
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
03:47 PM (IST) Oct 16
பிரபல யூடியூபரான இர்பான் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை சந்தித்த தருணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
02:44 PM (IST) Oct 16
விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா தன்னுடைய சினிமா பயணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
01:56 PM (IST) Oct 16
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நாளை காலை விசாரிக்கப்படும் என அறிவிப்பு
01:46 PM (IST) Oct 16
மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார்
01:08 PM (IST) Oct 16
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் மாயா, பூர்ணிமா உள்பட 6 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது புரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
11:06 AM (IST) Oct 16
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
10:55 AM (IST) Oct 16
கூகுளில் நாம் தேடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பணத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
10:17 AM (IST) Oct 16
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 7 எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
09:53 AM (IST) Oct 16
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் தூங்கிய நபர் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
09:52 AM (IST) Oct 16
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிய தம்பதியின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
09:45 AM (IST) Oct 16
கோவையில் விஜய்யின் லியோ பட முன்பதிவில் நடக்கும் நூதன மோசடியால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
09:21 AM (IST) Oct 16
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத்தின் 33-வது பிறந்தநாளான இன்று அவரது சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
08:28 AM (IST) Oct 16
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
07:54 AM (IST) Oct 16
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
07:53 AM (IST) Oct 16
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.