இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு... கோவையில் லியோ டிக்கெட் விற்பனையில் நடக்கும் நூதன மோசடி
கோவையில் விஜய்யின் லியோ பட முன்பதிவில் நடக்கும் நூதன மோசடியால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை கே ஜி சினிமாஸ் திரையரங்கில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் வழக்கமாக இந்த திரையரங்கில் பால்கனி டிக்கெட் விலை 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 200 ரூபாய் டிக்கெட் உடன் டீ காபி தின்பண்டங்கள் குளிர்பானங்கள் என அனைத்தையும் சேர்த்து காம்போ பேக் என்று ஒன்றைக் கொண்டு வந்து 450 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். மேலும் தற்பொழுது தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ஆன அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்களை அதிகப்படுத்தக் கூடாது, அதேபோல சரியான பார்க்கிங் வசதி திரையரங்குகளில் சுகாதாரமான சூழ்நிலை போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் இது குறித்த சுற்றறிக்கையை கோவை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கும் இருந்தார்.
இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல திரையரங்கமான கேஜி திரையரங்கம் காம்போ பேக் என்று ஒன்றைக் கொண்டு வந்து ஒரு டிக்கெட்டின் விலையை 450 ரூபாயாக விற்று வருவது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஆளு தான் ஒல்லி... ஆனா மியூசிக்ல கில்லி! 33 வயதாகும் அனிருத்துக்கு இத்தனை கோடி சொத்துக்களா?