ஆளு தான் ஒல்லி... ஆனா மியூசிக்ல கில்லியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத்தின் 33-வது பிறந்தநாளான இன்று அவரது சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
Anirudh
தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அவரின் இசைத்திறமையை கண்டறிந்த நடிகர் தனுஷ், தன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அதற்கு பெருமை சேர்க்கும் வகையில், முதல் பாடலிலேயே உலகளவில் பேமஸ் ஆனார் அனிருத். 3 படத்துக்காக அனிருத் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடல் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ஒரே நாளில் உலகளவில் வைரல் ஆனது.
Anirudh Ravichander
முதல் படத்திலேயே தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்திய அனிருத்துக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கினார் தனுஷ். அனிருத் போட்ட பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனதை அடுத்து அவரை தன்னுடைய கத்தி படத்திற்கு இசையமைக்க கமிட் செய்தார் விஜய். அனிருத் இசையமைத்த முதல் பெரிய படம் கத்தி. அப்படத்திற்காக அவர் இசையமைத்த தீம் மியூசிக் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக உள்ளது. அந்த அளவுக்கு தரமான இசையை கொடுத்து அடுத்தடுத்து அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை தட்டிதூக்கினார் அனிருத்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Music Director Anirudh
தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவின் மியூசிக் சென்சேஷனாக அனிருத் உள்ளார். நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழலும் அளவுக்கு அவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. தமிழில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகிய 4 பேரின் படங்களும் தற்போது அனிருத்தின் கைவசம் உள்ளது. விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 171, கமலின் இந்தியன் 2 என கோலிவுட்டில் தற்போது அனிருத் ராஜ்ஜியம் தான்.
Anirudh Birthday
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அவர் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு லியோ படத்தை ரெடி பண்ணி உள்ளார். அப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படம் பட்டாசாக இருப்பதாக ஏற்கனவே அனிருத் கூறி உள்ளதால் ரசிகர்களும் அதைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Anirudh net worth
33 வயதிலேயே பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகவும் திகழ்ந்து வருகிறார் அனிருத். அவரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரும் அனிருத் தான். அவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அனிருத்திடம் பிஎம்டபிள்யூ, போர்ஷ் என பல சொகுசு கார்களும் உள்ளன. சமீபத்தில் ஜெயிலர் வெற்றிக்கு பின்னர் அவருக்கு கலாநிதி மாறன் ஒரு போர்ஷ் காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்... கொடியசைத்து துவக்கி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்