Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பு தள்ளி வைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

Madras High Court postpones verdict on Senthil Balaji bail plea without mentioning the date smp
Author
First Published Oct 16, 2023, 3:57 PM IST | Last Updated Oct 16, 2023, 3:57 PM IST

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Asianet News from Israel: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: நிலைமை எப்படி உள்ளது? ஏசியாநெட் நேரடி கள ஆய்வு!

இந்த மனு மீதான இன்றைய விசாரணையின்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கு உரிமை உண்டு என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஜாமீன் பெற உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தந்திரம் செய்வதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios