Asianet News TamilAsianet News Tamil

மெரினா கடற்கரையில் தூங்கிய நபர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்..! துடி துடித்து பலி- வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் தூங்கிய நபர் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

A man who was sleeping on the Chennai Marina beach was killed on the spot when a tractor hit him KAK
Author
First Published Oct 16, 2023, 9:49 AM IST

மெரினா கடற்கரையில் விபரீதம்

சென்னை மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வரும் நபர்களுக்கு மெரினா கடற்கரை அடைக்கலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் ஏராளமானவர்கள் மணல் பரப்பியிலும்,  புல்வெளியிலும் படுத்து உறங்குவார்கள். பெரும்பாலான நேரங்களில் போலீசார்  கடற்கரையில் தூங்குபவர்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள மணலில் 60 வயதில் நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். 

A man who was sleeping on the Chennai Marina beach was killed on the spot when a tractor hit him KAK

தூங்கி கொண்டிருந்தர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்

அப்போது கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை இழுத்து செல்வதற்காக ட்ராக்டர் ஒன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளது. இரவு நேரம் என்பதால் மணல் பரப்பில் தூங்கிக் ஒருவர் கொண்டிருப்பதை தெரியாமல்டிராக்டர் அந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.  இதில் அந்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிராக்டர் ஓட்டி வந்த ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் ஆகாசுக்கு செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தை கடத்தல்.! அதிரடியாக இறங்கிய போலீஸ்-குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios