கூகுளில் எதை தேடக் கூடாது? உஷார் மக்களே!

கூகுளில் நாம் தேடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பணத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

Beware of Google Search Terms what not to search smp

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கூகுள் தேடலை நாம் எந்த அளவுக்கு நம்பியிருக்கிறோம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால், கூகுளில் நாம் தேடும் சில விஷயங்களில் சற்று அலட்சியமாக இருந்தால் வங்கி அக்கவுண்ட் காலியாகி விடும்.

கூகுள் தேடலில் நாம் எந்த விஷயத்தைப் பற்றியும் தேடும்போது சில இணையப் பக்கங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பெயருடன் தோன்றும். மோசடி செய்பவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலிருந்தும் அவற்றை வாங்கலாம். அதனால்தான் அவர்களின் வலைப்பக்கங்கள் மேலேயே காண்பிக்கின்றன. அந்த இணையப் பக்கம் உருவாக்கும் குக்கீகள் மால்வேரால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இது தெரியாமல் அந்த இணையப் பக்கத்தை பயன்படுத்தினால், நமது தனிப்பட்ட தகவல்கள் அவர்கள் கைக்கு சென்று விடும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கூகுளில் நாம் தேடும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?


ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை பலரும் தேடுகின்றனர். சைபர் குற்றவாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறி வருகிறது. நாம் பெரிய தொகை சம்பாதிக்கலாம் என மோசடியாளர்கள் நமக்கு ஆசை வார்த்தை காட்டலாம். வீட்டில் இருந்து கொண்டே இவ்வளவு சம்பாதிக்கலாம் என விளம்பரப்படுத்துவார்கள். அது உண்மைக்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் மிகவும்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற சைபர் மோசடிகளுக்கு பலியாகாதீர்கள்.

கஸ்டமர் கேர் நம்பர்


சர்ச் இன்ஜின் மூலம் கஸ்டமர் கேர் எண்ணைத் தேடினால், போலி எண்களும் காட்டப்படும். நிறுவனங்களின் எண்களை அறிய அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்வது நல்லது.

அதேபோல இணையதளத்தில் தெரிந்தவர்களின் விவரங்கள் வேண்டும் என்றால் ஃப்ரீ பீயூப்பிள் ஃபைண்டர்கள் என கூகுளில் தேடுவதை தவிர்க்கலாம். உதாரணத்திற்கு, உங்களது பழைய நண்பரை தேட வேண்டும் என்றால், சமூக வலைதளங்கள், அரசு ஆவணங்கள் என பொதுவெளியில் இருக்கும் தகவல்களில் தேடுங்கள்.

இந்த மொபைல்களில் WhatsApp இயங்காது.. லிஸ்டில் உங்கள் ஸ்மார்ட்போனும் இருக்கா.. செக் பண்ணுங்க..

சிபில் ஸ்கோர்


CIBIL அறிக்கை மற்றும் CIBIL மதிப்பெண்ணை இலவசமாகப் பெறலாம் என்று பல போலி இணையதளங்கள் உலா வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் கிரெடிட் அறிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

கிரிப்டோ வேலட்


கிரிப்டோ கரன்சி சார்ந்த விஷயங்களை கையாளும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். சில பணப்பரிமாற்றங்கள் வேலட் மூலம் நடக்கின்றன. கிரிப்டோ வேலட்களில் 12 முதல் 14 ரேண்டம் வார்த்தைகளை கொண்ட 'seed phrase' இருக்கும். அதை யாரிடமும் எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios