விண்ணில் சீறி பாய்ந்த சந்திரயான் – 3 ஆனது புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

11:47 PM (IST) Jul 14
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மதுரைக்கு வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11:31 PM (IST) Jul 14
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொடுத்த பரிசுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
11:03 PM (IST) Jul 14
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் அவருக்கு வழங்கப்பட்ட பிரான்சின் உயரிய விருதான Grand Cross of the Legion of Honour ஐ இந்திய மக்களுக்கு அர்ப்பணித்தார்.
10:35 PM (IST) Jul 14
கூகுள் பிக்சல் 7 தற்போது குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
10:12 PM (IST) Jul 14
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
08:58 PM (IST) Jul 14
இளநிலை நீட் மருத்துவ கலந்தாய்வு தொடர்பான முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
08:05 PM (IST) Jul 14
17 மற்றும் 16 வயது உடைய இரண்டு மகள்களையும் கற்பழித்துள்ளார் தந்தை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
07:38 PM (IST) Jul 14
ஒன் பிளஸ் நிறுவனம் தனது முதல் போல்டிங் போனை வெளியிடும் தேதி வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தககவல்களை பார்க்கலாம்.
07:00 PM (IST) Jul 14
ஜூலை 13 அன்று என்ன நடந்தது, ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதை தங்களுக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் மறுபிறப்பாக கொண்டாடுகிறார்கள். அது ஏன் என்பதை பார்க்கலாம்.
06:41 PM (IST) Jul 14
பூமியில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
05:58 PM (IST) Jul 14
ட்விட்டர் அதன் பயனாளர்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன் முழுமையான விவரத்தை இங்கு காணலாம்.
05:19 PM (IST) Jul 14
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்களின் பட்டியலில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இடம்பெறவில்லை
04:38 PM (IST) Jul 14
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.
03:49 PM (IST) Jul 14
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
03:16 PM (IST) Jul 14
ராக்கெட்டில் இருந்து எவ்வாறு சாட்டிலைட் தன்னை விடுவித்து ஆர்பிட்டில் செல்கிறது என்பதை இந்த வீடியோ பதிவு விளக்குகிறது.
03:09 PM (IST) Jul 14
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
02:42 PM (IST) Jul 14
நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
02:25 PM (IST) Jul 14
சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் நேரலைக் காட்சி இதோ
12:56 PM (IST) Jul 14
நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்
12:54 PM (IST) Jul 14
சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து தனது நிலவு பயணத்தை துவங்குகிறது. நிலவின் தென் துருவத்தில் தனது ஆராய்ச்சியை சந்திரயான் 3 துவங்கும்.
12:32 PM (IST) Jul 14
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
12:32 PM (IST) Jul 14
பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
12:31 PM (IST) Jul 14
அமெரிக்க செனட் குழு அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளது
12:31 PM (IST) Jul 14
பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்துக்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
12:30 PM (IST) Jul 14
தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை சமாளிக்க முடியாத திமுக அரசு வழக்கம் போல மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
12:29 PM (IST) Jul 14
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
10:56 AM (IST) Jul 14
விழுப்புரம் அருகே 80 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:40 AM (IST) Jul 14
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படத்தின் விமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:12 AM (IST) Jul 14
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆஜராகிறார். இதனால், நீதிமன்ற வாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
09:50 AM (IST) Jul 14
இஸ்ரோவின் (ISRO) கனவுத் திட்டமான சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எல்.வி.எம்.3 (LVM3) ராக்கெட் மூலம் நாளை பகல் 2.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
09:49 AM (IST) Jul 14
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
09:43 AM (IST) Jul 14
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடி பெற்றார்.
09:41 AM (IST) Jul 14
பிரான்ஸில் விரைவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
09:14 AM (IST) Jul 14
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
08:50 AM (IST) Jul 14
மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தின் FDFS பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
08:05 AM (IST) Jul 14
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், தாம்பரம், அடையார், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:04 AM (IST) Jul 14
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.