Maaveeran Review : மாவீரனாக மாஸ் காட்டினாரா சிவகார்த்திகேயன்? விமர்சனம் இதோ
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், யோகிபாபு, சரிதா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
மாவீரன் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கலக்கலான கார்ட்டூன் ஷர்ட் அணிந்தபடி மாவீரன் FDFS பார்க்க வந்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ
கேரக்டராவே வாழ்திருக்கார் சிவா
மாவீரன் முதல் பாதி முடிவில், யோகிபாபு காட்சிகளை நகைச்சுவையாக உள்ளது. மடோன் அஸ்வின் சூப்பராக எழுதி இருக்கிறார். சிவகார்த்திகேயன் என்ன ஒரு நடிகர், கேரக்டராவே வாழ்திருக்கிறார். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் கத்தி ஆரவாரம் செய்யும்படி இருந்தன. இரண்டாம் பாதியும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பிளாக்பஸ்டர்
மாவீரன் முதல் பாதி வேற லெவல். சிவகார்த்திகேயன் கெரியரிலேயே சிறந்த இண்டவெல் சீன் இதுதான். இப்போதே படம் பிளாக்பஸ்டர் ஃபீல் கொடுக்கிறது. இரண்டாம் பாதி பார்ப்போம் என டுவிட் செய்துள்ளார்.
பேண்டஸி ஒர்க் அவுட் ஆகி உள்ளது
மாவீரன் முதல் பாதி முடிவில், படத்தின் இண்டர்வெல் சீன் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இருந்தது. பேண்டஸி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மாஸ், காமெடி, பேண்டஸி, எமோஷன் என அனைத்தும் சரிவர கையாளப்பட்டு உள்ளது. இரண்டாம் பாதி எப்படி முடியும் என்பதை பொறுத்து தான் ரிசல்ட் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சிவா - யோகிபாபு சீன்ஸ் தெறிக்குது
கேன் வில்லியம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் போல் மெதுவாக ஆரம்பமாகி போகப்போக பிக் அப் ஆகி இருக்கிறது மாவீரன். யோகிபாபு மற்றும் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளுக்கு தியேட்டரே சிரிக்கிறது. முதல் பாதிவரை படம் நன்றாகவே உள்ளது. இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.
பிஜிஎம் வெறித்தனம்
மாவீரன் முதல் பாதி நன்றாக உள்ளது. சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். மற்ற நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கம் சூப்பர். சீனே சீனே பாடல் காட்சியமைப்பு அருமை. பரத் ஷங்கரின் பின்னணி இசை வெறித்தனமாக உள்ளது. இண்டர்வெல் வேறலெவல். என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிக்கு பாட்ஷா மாதிரி சிவாவுக்கு இந்த படம்
ரஜினிக்கு ஒரு பாட்ஷா, விஜய்க்கு ஒரு கில்லி, சிம்புவுக்கு ஒரு மாநாடு மாதிரி சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
திரைக்கதை வேறலெவல்
மாவீரன் முதல் பாதி அருமையாக உள்ளது. திரைக்கதை ரொம்ப நல்லா இருக்கு. நிறைய நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகள் நிரம்பி உள்ளது. எஸ்.கே. மிஷ்கின் இடையேயான மோதலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இரண்டாம் பாதியும் இதே போல் சென்றால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சிக்கு விடிவுகாலம் வந்தாச்சு! ஒருவழியா ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த படக்குழு - எப்போ ஆரம்பம் தெரியுமா?