Asianet News TamilAsianet News Tamil

Metro : கோவை, மதுரை மெட்ரோ ரயில்.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு - என்ன தெரியுமா?

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Madurai Metro Rail: Submission of project report to Tamil Nadu Govt
Author
First Published Jul 14, 2023, 10:09 PM IST

சென்னையில் 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில்  மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

அதன்படி மதுரையில்  திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு சுமார் 8500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை சில மாதங்களுக்கு முன் தமிழக  அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

Coimbatore Madurai Metro Rail: Submission of project report to Tamil Nadu Govt

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

அதைப் போல கோவை மெட்ரோ ரயில் திட்டம்139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகளை  செயல்படுத்தப்பட உள்ளது.முதல்கட்டமாக 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டப் பணிகளுக்கு ரூ.9 கோடி தமிழக அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுவதும் தற்போது நிறைவடைந்து   விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கையை தற்போது பெற்றுள்ள தமிழக அரசு அடுத்த கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கும் பொழுது உரிய ஒப்பந்தங்கள்  போடப்பட்டு  கோவை மற்றும் மதுரையின் மெட்ரோவின் கட்டுமான பணிகள் தொடங்கபட உள்ளது.

Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?

Coimbatore Madurai Metro Rail: Submission of project report to Tamil Nadu Govt

மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6 ஆயிரம் கோடியும் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

அதேபோல கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!

Follow Us:
Download App:
  • android
  • ios