Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜி வழக்கு: முட்டுக்கட்டை போட்ட நீதிமன்றம்.. மற்றொரு பக்கம் தமிழ்நாடு போலீசின் கோரிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.

A sudden twist in the case of Minister Senthil Balaji
Author
First Published Jul 14, 2023, 4:35 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

A sudden twist in the case of Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். இறுதி விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இரு தரப்பின் இறுதி விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் வழக்கின் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியுள்ளார். அதில், ‘செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது; செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்.

A sudden twist in the case of Minister Senthil Balaji

அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும், ‘செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுவதாக’ நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார். இந்த நிலையில் வேலைவாங்கி தருவதாக செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது தமிழக காவல்துறை. 6 மாத கால அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இ

Follow Us:
Download App:
  • android
  • ios