MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • முதல் இணைப்பாக தேனி நிர்வாகிகள்.. ஓபிஎஸ் கோட்டையில் புகுந்து கெத்து காட்டு இபிஎஸ்..!

முதல் இணைப்பாக தேனி நிர்வாகிகள்.. ஓபிஎஸ் கோட்டையில் புகுந்து கெத்து காட்டு இபிஎஸ்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 14 2023, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அந்த கையோடு அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்கள் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி மாவட்ட நிர்வாகிகள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

34

இதுகுறித்து  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;- அதிமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முருக்கோடை ராமர்( கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்), அன்னப்பிரகாஷ் (வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெரியகுளம் ஒன்றியம்) ஆகியோர், தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக்கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால் உறுப்பினர்களாக கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

44

மன்னிப்பு கடிதம் கொடுப்பவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என்று இபிஎஸ் கூறிய நிலையில் முதல் இணைப்பாக ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!
Recommended image2
G Square:ஜி ஸ்கொயர் நிறுவனர் அறிவித்த அதிரடி ஆஃபர்.! பரந்தூரில் ஒரு சென்ட் நிலம் இருந்தாலும் நிரூபியுங்கள்.! 50% பங்கு தருகிறேன்.!
Recommended image3
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved