இஸ்ரோவின் கனவு திட்டம்! இன்று விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3! உற்று நோக்கும் உலக நாடுகள்..!

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள இன்டர்பிளானட்டரி' என்ற இயந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது.

Chandrayaan 3 will be launched today!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள இன்டர்பிளானட்டரி' என்ற இயந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த மூன்று முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சந்திரயான் 3 கவுண்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!

Chandrayaan 3 will be launched today!

இந்நிலையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25½ மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்ததும் சந்திரயான் 3 விண்கலம் தாங்கிய எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் விண்ணில் பாயும்.

இதையும் படிங்க;- Chandrayaan 3 : சந்திரயான்-2 ல் இல்லாத சிறப்பு அம்சம் என்னென்ன தெரியுமா?

Chandrayaan 3 will be launched today!

கவுண்ட்டவுன் முடிந்ததும் சந்திரயான் 3 விண்கலம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios