சந்திரயான் 3 கவுண்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!

சந்திரயான் 3 விண்கலம் நாளை மதியம் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் அதனை ஏந்திச் செல்லும் ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது.

Chandrayaan 3 countdown started from the Satish Dhawan Space Centre in Sriharikota

சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் சரியாக பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. 25½ மணி நேர கவுண்ட்டவுன் நாளை பிற்பகலில் முடிந்ததும் சந்திரயான் 3 விணகலத்தின் நிலவுப் பயணம் தொடங்கிவிடும்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. இன்று தொடங்கியுள்ள கவுண்ட்டவுன் நாளை முடிவுக்கு வந்ததவுடன், அதாவது, சரியாக பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிய எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் விண்ணில் பாயும்.

ஹரியானா எம்எல்ஏ கன்னத்தில் பளார்! வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் சீற்றம்!

Chandrayaan 3 countdown started from the Satish Dhawan Space Centre in Sriharikota

'சந்திரயான்-3' மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இஸ்ரோவின் இத்திட்டம் சந்திரயான் 2 திட்டத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களில் மாறுபட்டதாக இருக்கிறது.

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் எல்லா பகுதிகளும் முழுமையாக பொருத்தப்பட்டு, அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டன. திட மறுறம் திரவ எரிபொருள் நிரப்புதல், பேட்டரி சார்ஜ் செய்தல் போன்ற கவுண்டவுன் நேரத்தில் கடைசி கட்ட பணிகள் நடைபெறும்.

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சீறிப்பாயும் வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நபர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios