ஹரியானா எம்எல்ஏ கன்னத்தில் பளார்! வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் சீற்றம்!
தன்னை கன்னத்தில் அறைந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எம்எல்ஏ ஈஸ்வர் சிங் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் கைதல் என்ற இடத்தில் ஜேஜேபி எம்எல்ஏ ஈஸ்வர் சிங் புதன்கிழமை தனது தொகுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை பார்வையிடச் சென்றபோது ஒரு பெண் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) அங்கம் வகிக்கிறது. சிங்கின் குலா தொகுதியில் உள்ள பாட்டியா கிராமத்தில் காகர் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஸ்வர் சிங் புதன்கிழமை வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய அந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் கோபமடைந்த அந்தப் பெண்ணும் வேறு சிலரும் ஈஸ்வர் சிங்கை எதிர்கொண்டு போதிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், எம்எல்ஏவை சட்டென்று முகத்தில் அறைந்திருக்கிறார்.
உடனடியாக வெளியேறுங்கள்! தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பெண் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முன்னிலையில் அடிப்பதும், கோபத்துடன் "இப்போது ஏன் வந்தாய்?" என்று கேள்வி எழுப்பவதும் வீடியோவில் காணமுடிகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஈஸ்வர் சிங் கூறியுள்ளார்.
"அவர் செய்ததற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை" என்று கூறிய ஈஸ்வர் சிங், "அந்தப் பெண் நான் நினைத்திருந்தால், தடுப்பணை உடைந்திருக்காது என்று கூறினார். நடத்திருப்பது ஒரு இயற்கை பேரழிவு என்றும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்தது என்றும் நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு பிறகு கக்கர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இடைவிடாத மழை பெய்து வருவதால், பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
நாளை விண்ணில் பாயும் சந்திரயான் 3! எல்.வி.எம். 3 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்