Asianet News TamilAsianet News Tamil

தத்தளிக்கும் தலைநகரம்; செங்கோட்டைக்குள் புகுந்த வெள்ளம்; தண்ணீரில் மிதக்கும் டெல்லி!!

தொடர்ந்து யமுனை நதியின் நீர்மட்டம் இன்று மதியம் 3-4 மணிக்கு மேல் அதிகரித்தால் பெரிய அளவில் நிலைமை மோசமாகும் என்று மத்திய வாட்டர் கமிஷன் தெரிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. செங்கோட்டைக்குள் வெள்ளம் புகுந்து இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

"Evacuate, Don't Wait," Arvind Kejriwal Warns People In Delhi's Low-Lying Areas
Author
First Published Jul 13, 2023, 7:42 AM IST

டெல்லியில் 45 ஆண்டுகளுக்குப் பின் யமுனை ஆற்றில் புதன்கிழமை வரலாறு காணாத அளவுக்குப் வெள்ளப்பெருக்கெடுத்து ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் யமுனை நதி இன்று 208.46 மீட்டராக அதிகரித்துள்ளது. நேற்று நீர்மட்டம் 207.83 மீட்டராக இருந்தது. இது 1978-ல் பதிவு செய்யப்பட்ட 20 7.49 மீட்டரை விட அதிகமாகும். தொடர்ந்து யமுனையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு 100 மீட்டர் வரை யமுனை நதியின் வெள்ளம் தலைகாட்டியுள்ளது.

புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், "நாம் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். யமுனை நதியின் அருகே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்" எனக் கூறினார். டெல்லி அரசு தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தீவிரமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் பள்ளிகளை நிவாரண முகாம்களாக மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் 207.71 மீட்டராக உயர்ந்தது. இதற்கு முன் 1978 இல் அதிகபட்சமாக 207.49 மீட்டர் வரை  நீர்மட்டம் உயர்ந்தது. நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் மாநில அரசின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு வரும் சோனியா காந்தி! பாஜகவுக்கு எதிராக கூடும் 24 எதிர்க்கட்சிகள்!

"Evacuate, Don't Wait," Arvind Kejriwal Warns People In Delhi's Low-Lying Areas

நதியின் அருகே உள்ள வீடுகள் மற்றும் சந்தைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணையத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இதனால் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், யமுனையில் நீர் மட்டத்தை நிர்வகிக்க உதவுவதற்காக, ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து  குறைந்த அளவு தண்ணீரைத் திறந்துவிடுமாறு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் வாரங்களில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்கும் சூழலில் நாட்டின் தலைநகரில் வெள்ளம் பற்றிய செய்தி உலகிற்கு நல்ல செய்தியை அனுப்பாது என்றும் இந்த சூழ்நிலையில் இருந்து டெல்லி மக்களை நாம் ஒன்றாகக் காப்பாற்ற வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

2 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.. இன்று எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்?

டெல்லியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனிடையே, நதியின் கரைகளை வலுப்படுத்தவும், வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அத்தகைய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் 1924, 1977, 1978, 1995, 2010, மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பெரும் வெள்ளம் பதிவாகியுள்ளது. குறிப்பாக , கடந்த காலங்களில், செப்டம்பர் மாதத்தில் வெள்ளப்பெருக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜூலையில் குறைவான மழை பெய்யும் போக்கையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நதியில் வண்டல் கணிசமாக அதிகரித்துள்ளதே நீர்மட்டம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியதற்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போதிய அளவுக்கு தூர்வாரப்படாததாலும், நதியின் நீரோட்டத்திற்கு இடையூறாக ஏராளமான பாலங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும் ஆற்றுப்படுகையில் வண்டல் மண் தேங்கியுள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்!

குடிநீர் நெருக்கடி

வசிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் குடிநீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.  ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் இன்று காலை 7 மணியளவில் யமுனையில் 208.46 மீட்டர் நீர்மட்டம் இருந்தது.

வெள்ளத்தில் மூழ்கின
மொனாஸ்டிரி சந்தை, யமுனா பஜார், கர்ஹி மண்டு, கீதா காட், விஸ்வகர்மா காலனி, கடா காலனி, பழைய ரயில்வே பாலம் அருகே உள்ள நீலி சத்ரி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், நீம் கரோலி கௌஷாலா மற்றும் வசிராபாத் முதல் மஜ்னு கா திலா வரையிலான ரிங் ரோடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மயானம் மூடல்:
பழைய டெல்லியில் யமுனை ஆற்றுக்கு அருகில் உள்ள கீதா காலனி மயானமும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கர்கர்டுமா மற்றும் காஜிபூர் தகன மைதானங்களில் தகனம் செய்யும் வசதிகளைப் பயன்படுத்துமாறு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) மக்களை வலியுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios