மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10:18 PM (IST) Dec 11
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த மாநிலங்களின் விவசாயிகள் ரூ. 12,000 பெற உள்ளார்கள். திட்டத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
09:53 PM (IST) Dec 11
எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
09:11 PM (IST) Dec 11
காஷ்மீர் பண்டிட்டுகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யும் ஜம்மு காஷ்மீர் மசோதாக்களை ராஜ்யசபா நிறைவேற்றியது.
08:49 PM (IST) Dec 11
விவோ (Vivo) கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான பிறகு Vivo X100 மற்றும் X100 Pro ஐ டிசம்பர் 14 அன்று உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
08:31 PM (IST) Dec 11
இன்னும் ஒரு உயிர் பறி போனால்கூட திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
07:03 PM (IST) Dec 11
ஒரு முறை சார்ஜ் செய்தால் 104 கிமீ வரை செல்லும் கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
06:38 PM (IST) Dec 11
வருமான வரி விதிகளின்படி, இப்போது இவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
06:16 PM (IST) Dec 11
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.
05:38 PM (IST) Dec 11
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான முதல் சிறப்பு ரயில் வருக்கிற 15ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்புகிறது
05:16 PM (IST) Dec 11
குழந்தை உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவதிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டணங்களை தெரிவித்த நிலையில், விசாரணை குழுவை அமைத்துள்ளது மருத்துவத் துறை.
05:11 PM (IST) Dec 11
மோகன் யாதவ், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடன், சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.
05:11 PM (IST) Dec 11
மோகன் யாதவ், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடன், சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.
03:24 PM (IST) Dec 11
சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:14 PM (IST) Dec 11
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
02:21 PM (IST) Dec 11
நெபோடிசம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் வரிசையாக களமிறங்கும் வாரிசுகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
01:46 PM (IST) Dec 11
வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
01:34 PM (IST) Dec 11
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்
01:33 PM (IST) Dec 11
மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
01:21 PM (IST) Dec 11
ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீண்டும் சென்னை வந்துள்ளதன் ஷாக்கிங் பின்னணியை பற்றி பார்க்கலாம்.
12:49 PM (IST) Dec 11
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்
12:14 PM (IST) Dec 11
சீரியல் நடிகை சங்கீதாவும், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
11:42 AM (IST) Dec 11
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது
11:19 AM (IST) Dec 11
நயன்தாரா நடிப்பில் டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த அன்னபூரணி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10:57 AM (IST) Dec 11
உச்ச நீதிமன்றத்தை நாடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா நிவாரணம் பெறலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
10:33 AM (IST) Dec 11
உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தகவல்
10:25 AM (IST) Dec 11
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
10:02 AM (IST) Dec 11
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்கும் வகையில், மத்திய குழு இன்று சென்னை வருகிறது. இந்த குழு இரண்டு நாட்கள் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
09:42 AM (IST) Dec 11
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் இந்த வாரம் யார் யாரெல்லாம் எலிமினேஷனில் சிக்கினார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:51 AM (IST) Dec 11
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின்னர் வனிதாவின் மகள் ஜோவிகா, பிரபல ஆண் போட்டியாளருடன் அவுட்டிங் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
08:07 AM (IST) Dec 11
எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் நண்பர் தானே அவர் கூறி வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி வாங்கி தந்தால் தமிழ்நாட்டில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முடியும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
08:06 AM (IST) Dec 11
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பில் சிக்கி ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கட்டணமில்லாமல் ஆவணங்களை மீண்டும் வழங்கும் வகையில் நாளை 46 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
08:06 AM (IST) Dec 11
சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.