பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்பு: பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Petrol diesel price cut likely soon as OMCs now make profit smp

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருக்கிறபோதும், நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

இந்த நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் ஓராண்டுக்கு மேல் மாற்றமில்லாமல் இருக்கும் நிலையில், விரைவில் அதன் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, கச்சா விலை குறைவின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கும் பொருட்டு மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) இப்போது பெட்ரோல், டீசல் என இரண்டு எரிபொருள்களிலும் லாபம் ஈட்டுவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் குறைக்கப்படலாம் என இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து அரசும் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

கச்சா எண்ணெய் விலையின் தற்போதைய நிலவரம் குறித்து நிதி மற்றும் எண்ணெய் அமைச்சகம் விவாதித்து வருகிறது. உலகளாவிய காரணிகளுடன் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம் குறித்து அவர்கள் விவாதித்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

2022 ஆம் ஆண்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.17 மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ.35 என உச்சக்கட்ட நஷ்டம் அடைந்ததை ஒப்பிடும்போது, இப்போது பெட்ரோலுக்கு ரூ. 8-10; டீசலில் ரூ.3-4 என எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. கச்சா எண்ணெய் மற்றும் சில்லறை விலை குறித்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்ககளுடன் ஏற்கனவே எண்ணெய் அமைச்சகம் மதிப்பாய்வும் செய்துள்ளது.

தகுதி நீக்கத்தை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கடந்த 3 காலாண்டுகளில் வலுவான லாபத்தின் காரணமாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்புகள் இப்போது குறைந்துள்ளன. IOC, HPCL மற்றும் BPCL ஆகிய மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடந்த காலாண்டில் மட்டும் ரூ.28,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதன்படி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதுடன், இழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எனவே, அதன் பலன்கள் இப்போது நுகர்வோருக்கு மாற்றப்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுபது பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவும். மேலும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75-80 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஓராண்டாக மாறாமல் உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. அப்போது பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயையும். டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயாகவும் மத்திய அரசு குறைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios