குழந்தை உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம்.. அதிரடியில் இறங்கிய மருத்துவத்துறை..

குழந்தை உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவதிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டணங்களை தெரிவித்த நிலையில், விசாரணை குழுவை அமைத்துள்ளது மருத்துவத் துறை.

Babys body in cardboard box incident: Medical department sets up inquiry committee-rag

கனமழை காரணமாக சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி கழுத்தளவு நீர் தேங்கியது. அங்கு வசித்து வந்த கூலி தொழிலாளியான மசூத் பாஷாவின் மனைவி சவுமியா 2ஆவது முறையாக கருவுற்றிருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டது. 

அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்ததால், மனைவி சவுமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளார் மசூத் பாஷா. இந்த நிலையில், வீட்டிலேயே சவுமியாவுக்கு குழந்தை பிறந்தது. தாயையும்.சேயையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். 

பிறகு 108 ஆம்புலன்ஸுக்கு கால் செய்தும் தொடர்பு கொள்ள முடியாததால், வேறு வழியின்றி சோபியாவையும் பிறந்த குழந்தையையும் மீன்பாடி வண்டி மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மசூத் பாஷா அழைத்து சென்றுள்ளார்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பச்சிளம் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

உடனடியாக புளியந்தோப்பு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, படகு ஒன்றை வரவழைத்து தாய், சேய் இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து, 5 நாட்களாகியும் இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாக மசூத் பாஷா வேதனை தெரிவித்திருந்தார். 

மேலும், குழந்தையை ஒப்படைக்க தன்னிடம் இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். புளியந்தோப்பு காவல்நிலைய காவலர்கள் மூலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல் தந்தை மசூத் பாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால், இறந்த குழந்தையை, Shroud என சொல்லப்படக்கூடிய துணியில் கூட சுத்தி கொடுக்காமல் அட்டை பெட்டியில் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

பிணவறையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிகிச்சையில் இருந்த மேல் அதிகாரிகள் அனைவருக்கும் ’மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி தெரிவித்தார். 

விசாரணையில் இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்தது உறுதி ஆனதை தொடர்ந்து,சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை பாய்கிறது. இந்த சம்பவ குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios