Asianet News TamilAsianet News Tamil

Vijayakanth Health : உடல் நிலையில் முன்னேற்றம்.! வீடு திரும்பினார் விஜயகாந்த்- மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தகவல்

Vijayakanth returned home from the hospital after his health improved KAK
Author
First Published Dec 11, 2023, 10:23 AM IST

விஜயகாந்திற்கு உடல் நிலை பாதிப்பு

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய மாபெரும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், தனியாக தேர்தலில் போட்டியிட்டு தனது வாக்கு சதவிகிதத்தை நிரூபித்து காட்டினார். இதனையடுத்து தங்கள் அணியோடு கூட்டணி அமைக்க வருமாறு ஒவ்வொரு கட்சியும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த விஜயகாந்த் உடல் நிலை பாதிப்பால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தேமுதிகவிற்கும் இறங்கு முகம் தொடங்கியது. இதனையடுத்து விஜயாகந்திற்கு பல சிறப்பு சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Vijayakanth returned home from the hospital after his health improved KAK

வீடு திரும்பினார் விஜயகாந்த்

அப்போது அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வதந்தி பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. 

இதையும் படியுங்கள்

சனாதனம் குறித்து பேசியதால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதா.? பாஜகவிற்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்

Follow Us:
Download App:
  • android
  • ios