Asianet News TamilAsianet News Tamil

சனாதனம் குறித்து பேசியதால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதா.? பாஜகவிற்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்

சென்னை வெள்ள பேரிடர் நேரத்திலும் ஆளுங்கட்சியை விமர்சிப்பதும் அரசியல் ஆதாயம் தேடுவதும் மிகவும் அற்பமான அரசியல் என திருமாவளவன் விமர்சித்தார்
 

Thirumavalavan requests central government to provide relief fund for Chennai flood KAK
Author
First Published Dec 11, 2023, 9:59 AM IST

பேரிடர் காலத்திலும் அரசியல் செய்வதா.?

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசினார். அப்போது சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள முடியவில்லை  அமைச்சர் சட்டமன்ற, உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

5000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை  மத்திய அரசு ஏற்கவில்லை. 1000 கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பது என்பதை அதிமுக போன்ற கட்சிகள் கைவிட வேண்டும்.

Thirumavalavan requests central government to provide relief fund for Chennai flood KAK

நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம்

இந்த பேரிடர் நேரத்திலும் ஆளுங்கட்சியை விமர்சிப்பதும் அரசியல் ஆதாயம் தேடுவதும் மிகவும் அற்பமான அரசியல் என விமர்சித்தார்.  விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29 திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறும். இதில்  முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.  

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகா அர்ஜுன் கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற இருப்பதாக தெரிவித்தார்.  இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று நம்புவதாக தெரிவித்தார். 

Thirumavalavan requests central government to provide relief fund for Chennai flood KAK

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன.?

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் சூழல்களை பொறுத்து மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் இது தேசிய பார்வையோடு நடந்த தேர்தல் அல்ல மோடியா,ராகுல் காந்தியா என முன்னிறுத்தப்பட்ட தேர்தல் அல்ல ராஜஸ்தானில் உள்ள பிரச்சனைகள் வேறு மத்திய பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகள் வேறு சதீஷ்கரியில் உள்ள அரசியல் சூழல்கள் வேறு  தெலுங்கானாவில் உள்ள சூழல்கள் வேறு எனவே மாநிலங்களுக்கு மாநிலம் பிரச்சனைகள் வெவ்வேறாக இருக்கன்ற சூழலில் அங்கு உள்ள மாநில தலைவர்கள் மக்களிடையே பெற்ற செல்வாக்கு ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

 அதனை நாடாளுமன்ற தேர்தலோடு பொருத்துவது சனாதனம் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசியதால்தான் காங்கிரஸ் தோற்றது என்று விமர்சிப்பது உண்மையை மறைப்பதாகும். அது ஒருபோதும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திருமாவளவன் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios