போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

08:19 PM (IST) Jan 10
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்
07:50 PM (IST) Jan 10
ரேஷன் கடைகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
06:03 PM (IST) Jan 10
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைத்ததன் பின்னணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பது தெரியவந்துள்ளது
04:59 PM (IST) Jan 10
ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது
04:39 PM (IST) Jan 10
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன
03:49 PM (IST) Jan 10
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
03:05 PM (IST) Jan 10
ரெனால்ட் இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் காரை அறிமுகப்படுத்துகிறது. இது மாருதி சுசுகி ஆல்டோவை விட குறைவான விலை உடன் வருகிறது.
02:47 PM (IST) Jan 10
பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
02:31 PM (IST) Jan 10
லட்சத்தீவுக்கு எப்படி போவது, அதற்கான அனுமதி பெறுவது? போன்ற தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
02:08 PM (IST) Jan 10
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
02:03 PM (IST) Jan 10
விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு சினிமாவில் உதவிக்கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.
01:57 PM (IST) Jan 10
குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
01:39 PM (IST) Jan 10
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகைக்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:58 PM (IST) Jan 10
இந்த ஆண்டு தமிழகத்தையே மிரட்டிய வடகிழக்கு பருவமழை சீசன் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
12:49 PM (IST) Jan 10
12:22 PM (IST) Jan 10
ரயில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ரயில்வே விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11:58 AM (IST) Jan 10
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:57 AM (IST) Jan 10
முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வாங்கியுள்ளது.
11:56 AM (IST) Jan 10
பராக் அகர்வால், அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டபோது உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். ரூ.100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
11:33 AM (IST) Jan 10
குறைந்த பணத்தை செலவழித்து அந்தமான் சுற்றுப்பயணம் செய்யுங்கள். முன்பதிவு செய்வதற்கு முன் ஐஆர்சிடிசி பேக்கேஜ் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
10:53 AM (IST) Jan 10
பெட்ரோலில் இயங்காமல் மின்சார பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை நீங்களே வாங்க விரும்பினால், இப்போது நீங்கள் சரியான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
10:44 AM (IST) Jan 10
ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
10:33 AM (IST) Jan 10
பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷனில் எலிமினேட் ஆகி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் வர்மாவின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.
10:08 AM (IST) Jan 10
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:05 AM (IST) Jan 10
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
10:04 AM (IST) Jan 10
தமிழ் திரையுலகில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:11 AM (IST) Jan 10
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
08:19 AM (IST) Jan 10
அதிமுக பிரமுகரின் மகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
08:11 AM (IST) Jan 10
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை பெற வாய்ப்பு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இதன் மூலம் கிடைக்கும்.
08:00 AM (IST) Jan 10
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
07:46 AM (IST) Jan 10
தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:45 AM (IST) Jan 10
செந்தில் பாலாஜி எனது பழைய நண்பர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை என்று டிடிவி. தினகரன் தெரிவித்தார்.