Asianet News TamilAsianet News Tamil

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் திடீர் ராஜினாமா..! என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!

மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் 1996 -2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வழக்கறிஞராக மட்டுமில்லாமல், 2002-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

tamilnadu advocate general shunmugasundaram resigned
Author
First Published Jan 10, 2024, 7:41 AM IST

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் 1996 -2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வழக்கறிஞராக மட்டுமில்லாமல், 2002-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு 2008-ம் ஆண்டு வரை எம்.பி-யாக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக பணி அனுபவமுள்ள சண்முக சுந்தரம் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து அரசு தலைமை வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவிட்டனர் - அமைச்சர் ரகுபதி

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். ராஜினாமா முடிவை தமிழக அரசிடமும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பொறுப்பில் இருந்து விலகி சண்முகசுந்தரம் தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த தலைமை வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை அடுத்து பி.எஸ்.ரமணா நியமிக்கப்படுவார் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு மற்றும் பேரறிவாளனை பரோலில் விடுப்பு அளிப்பது தொடர்பான வழக்கிலும் ஆஜராகி வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios