அதிமுக பிரமுகரின் மகன் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. கதறிய தந்தை.. நடந்தது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (62). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். அதிமுகவில் பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் ஆனந்த் (38).
அதிமுக பிரமுகரின் மகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (62). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். அதிமுகவில் பொறுப்பாளராக உள்ளார். இவரது மூத்த மகன் ஆனந்த் (38). இவர், காஞ்சிபுரம் காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இடைத்தரகர் அப்பு என்ற குணரஞ்சனுக்கும், ஆனந்த்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி ஆனந்த்துக்கும், அப்புவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது தந்தை பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தனது தந்தையிடம் வேலை விவகாரத்தில் சிறிய பிரச்சனை என்றும் நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் கூறி அனுப்பி வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு திரும்பததால் அதிர்ச்சியடைந்த தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போதும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செட்டியார்பேட்டை பகுதியில் தலை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வௌ்ளத்தில் சடலமாக கிடப்பதாக ஜேக்கப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் ஜேக்கப் புகார் அளித்தார்.
இதையும் படிங்க;- தமிழகத்தில் அதிர்ச்சி.. பட்டியலின சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை? எப்படி தெரியுமா?
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அப்புவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.