- Home
- Gallery
- தமிழகத்தில் அதிர்ச்சி.. பட்டியலின சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை? எப்படி தெரியுமா?
தமிழகத்தில் அதிர்ச்சி.. பட்டியலின சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை? எப்படி தெரியுமா?
பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட மகளை பெற்றோர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thanjavur Crime News
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவர் பக்கத்துக்கு கிராமமான பூவாளூரை சேர்ந்த நவீன்(19). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். படிப்பை முடித்த இருவரும் தற்போது இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
Marriage
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2 பேரும் கடந்த டிசம்பர் 31ம்தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் வைரலானது. இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Honor Killing
இதனையடுத்து போலீசார் கடந்த 2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். பின்னர், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டு, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்து விட்டதாக நவீனுக்கு தெரியவந்தது. மேலும், பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
Police Complaint
இதை கேட்டு அதிர்ச்சியடைந்து அழுது கதறிய நவீன் இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.