பிக்பாஸ் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு எலிமினேட் ஆன விஜய் வர்மாவின் சம்பள விவரம் இதோ
பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷனில் எலிமினேட் ஆகி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட விஜய் வர்மாவின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.
Vijay Varma
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது. இதில் விஜய் வர்மா, மாயா, விஷ்ணு விஜய், தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகிய 6 பேர் இறுதி வாரத்தில் இருந்தனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பதால் அது யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Bigg Boss Vijay Varma
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல் நெருங்க நெருங்க, எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக எண்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று முதல் ஆளாக அனன்யா ராவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதையடுத்து அக்ஷயா மற்றும் வினுஷா ஆகியோர் எண்ட்ரி கொடுத்தனர். இதனால் பிக்பாஸ் வீடு மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Vijay Varma Eliminated
அடுத்ததாக சரவண விக்ரம் எண்ட்ரி கொடுத்த கையோடு ஒரு போட்டியாளரை மிட் வீக் எவிக்ஷனில் தூக்கி உள்ளார் பிக்பாஸ். அதன்படி மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற விஜய் வர்மா மிட் வீக் எவிக்ஷனில் எலிமினேட் ஆகி உள்ளார். ஏற்கனவே எலிமினேட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த விஜய் வர்மா, தற்போது எலிமினேட் ஆகி உள்ளதால் நூலிழையில் பைனல் செல்லும் வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார்.
Vijay Varma Salary
இருந்தாலும் பிக்பாஸ் அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் வர்மாவுக்கு ஒரு நாளை ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இதனால் ஆரம்பத்தில் இருந்த 21 நாட்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் சம்பளமாக வாங்கிய விஜய் வர்மா, அடுத்ததாக வைல்டு கார்டாக வந்து தங்கி இருந்த 44 நாட்களுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் என மொத்தமாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... அயலான் படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்ததா அரசு? தயாரிப்பு நிறுவனத்தின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்