அயலான் படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்ததா அரசு? தயாரிப்பு நிறுவனத்தின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
Ayalaan
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கான ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ayalaan sivakarthikeyan
இந்த நிலையில் அயலான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அப்படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஜனவரி 12ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அயலான் படத்திற்கு 2 சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ஜனவரி 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ஒரே ஒரு சிறப்பு காட்சியை திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... சிம்பிள் சேலையில் மைல்டான கவர்ச்சி.. இடையழகில் ரசிகர்களை மடிக்கும் தர்ஷா குப்தா - கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!
Ayalaan FDFS
அதாவது வழக்கமாக 11 மணிக்கு தொடங்கப்படும் முதல் காட்சி, தற்போது ஒரே ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தொடங்கப்படும். மேலும் தினசரி அதிகபட்சம் 5 காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு நன்றி தெரிவித்து அயலான் பட தயாரிப்பு நிறுவனம் போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.
KJR X post
அதன்படி அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “எங்கள் படத்துக்கு அதிகாலை காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி. சூரிய உதயத்துடன் அயலான் பட காட்சிகளை காண தயாராகுங்கள். இந்த பொங்கல் அயலான் பொங்கல்” என பதிவிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அயலான் படத்துக்கு மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதா என குழம்பிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கமல் தான் அவங்களுக்கு எல்லாம்.. இறக்கும் தருவாயில் கதறி அழுத ஸ்ரீவித்யா - பல உண்மைகளை சொன்ன குட்டி பதமினி!