Asianet News TamilAsianet News Tamil

பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ? கணக்கு எடுக்கும் பணி தொடங்கியது..!

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Memo to transport workers who do not come to work... tamilnadu government taken action tvk
Author
First Published Jan 10, 2024, 11:56 AM IST | Last Updated Jan 10, 2024, 12:04 PM IST

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- இப்போதே ஆம்னி பேருந்துகளில் ரூ.700 உயர்த்திட்டாங்க.. பொங்கல் பண்டிகை அப்போ நினைத்து பார்க்கவே அச்சம்- ஓபிஎஸ்

Memo to transport workers who do not come to work... tamilnadu government taken action tvk

வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையிலான வகையில் திமுகவின் தொமுச, காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி சங்கம் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள், பணிமனை ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஓட்டுநர்களை வரவழைத்து பொதுப் போக்குவரத்து தடைபடாதவாறு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான சென்னை பல்லவன் இல்லம் முன்பாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று  சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க;-  Murasoli Building : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Memo to transport workers who do not come to work... tamilnadu government taken action tvk

இந்நிலையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கணக்கு எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios