Asianet News TamilAsianet News Tamil

Murasoli Building : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 

Murasoli Panchami land case.. Listing Commission can investigate.. Chennai High Court tvk
Author
First Published Jan 10, 2024, 11:17 AM IST | Last Updated Jan 10, 2024, 11:40 AM IST

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வாங்கியுள்ளது. 

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம்  தொடர்பாக விசாரிக்க தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க;- இப்போதே ஆம்னி பேருந்துகளில் ரூ.700 உயர்த்திட்டாங்க.. பொங்கல் பண்டிகை அப்போ நினைத்து பார்க்கவே அச்சம்- ஓபிஎஸ்

Murasoli Panchami land case.. Listing Commission can investigate.. Chennai High Court tvk

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். அப்போது பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காரணத்திற்காக தேசிய எஸ்.சி. ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்ததார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய்த் துறைதான் விசாரிக்க முடியுமே தவிர,  தேசிய எஸ்.சி. ஆணையம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

Murasoli Panchami land case.. Listing Commission can investigate.. Chennai High Court tvk

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி,  பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல. ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தான் என தெரிவித்தார். வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாகத்தான் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க;-  கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

Murasoli Panchami land case.. Listing Commission can investigate.. Chennai High Court tvk

அதில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தொடரலாம். புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதியின் வழக்கை தள்ளுபடி செய்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios